ராமநாதபுரம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பு

ராமநாதபுரம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பு தங்கத்தை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

ராமநாதபுரம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பு தங்கத்தை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் இருந்து கடல்வழியாக ராமேஸ்வரத்திற்கு 7.7 கிலோ தங்கம் ஜன.4ல் கடத்தப்பட்டிருந்தது. தங்கச்சிமடம் அருகே திருச்சி மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளை தாக்கிவிட்டு தலைமறைவான ஐசக் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைதான ஐசக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மைக்கேல் ராயப்பன் என்பவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.