மானியம் பெறுவதற்கான தகுதி
கூட்டுறவு, பொது மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பை பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் மானியம் பெறலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
சிட்டா / அடங்கல், வயல் / நாற்றாங்கால் புகைப்படம், பயனாளியின் புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், கரும்பு பதிவு ஒப்பந்த நகல் போன்றவை.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மேற்காணும் திட்ட இனங்களில் மானியம் பெற உழவன் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளாக இருந்தால், மேலாண்மை இயக்குநர்களையும், தனியார் சர்க்கரை ஆலைகளாக இருந்தால், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தினால் வரும் ஆண்டுகளில் கரும்பு நடவுக்கான செலவு குறையும் என்பதுடன், ஒரு ஏக்கரில் கிடைக்கும் கரும்பு மகசூலும் அதிகரிக்கும் என்பதால், கரும்பு விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9