கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து
சென்னை ராயபுரம் அருகே வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து
சென்னை ராயபுரம் கல்மண்டபம் பிரதான சாலையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த தனியார் இண்டர்நெட் கேபிள்களில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிக்கி கீழே விழுந்த நிலையில், அவ்வழியே வந்த மாநகர பேருந்து ஓட்டுநர் தக்க நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதில் நிலைதடுமாறி விழுந்த போது பேருந்தின் அடியில் சென்றுள்ளார். பின்னர் கீழே விழுந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.