இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கட்டுள்ளது.