பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் புகழ் உயரவில்லை
பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவின் புகழோ, செல்வாக்கோ உயரவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மதிப்பு உயராதது மட்டுமல்ல, 2008 உடன் ஒப்பிட்டால் பல நாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்ததும் ஆய்வில் மூலம் அம்பலம் ஆகி உள்ளது. இந்தியாவின் செல்வாக்கு, மோடியின் அறிமுகம், திறமை உள்ளிட்டவை குறித்து உலக அளவில் பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்ட விவரங்களைக் கொண்டு பேராசிரியர்கள் ரிதும்பரா, மனுவீ, இர்ஃபான் நூருதீன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.