தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷ்யாவிற்கு
தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்த சி.பி.ஐ.
கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேர் கைது
கைது செய்யப்பட்ட 4 பேரும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி வந்தது அம்பலம்
கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக தகவல்
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்தியது