ஜெய்ராம் ரமேஷ்
சாம் பிட்ரோடாவின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களைப் போலவும் இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பிட்ரோடா பேசியதற்கு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். சாம் பிட்ரோடா கருத்து துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.