கோடைக்கால சிறப்பு ரயில்கள்
தாம்பரம் —திருவனந்தபுரம் கொச்சுவேளி இடையே வாரம் இரு தடவை கோடைகால விடுமுறை சிறப்பு ரயில்களை, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக இரு வழிகளிலும் தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் வியாழன் சனிக்கிழமைகளில் இரவு 07.30 க்கு புறப்பட்டு வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.45 க்கு திருவனந்தபுரம் கொச்சுவேளி ரயில் நிலையத்தை சென்றடையும்.
திரும்பும்போது வெள்ளி ஞாயிறு தினங்களில் திருவனந்தபுரம் கொச்சுவேளி ரயில் நிலையத்தில் பகல் 12.30 க்கு புறப்பட்டு சனி திங்கள் கிழமைகளில் காலை 04.15க்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மேற்காணும் தகவல்களின்படி இந்த ரயில்கள் 16/05/24 முதல் 29/06/24 வரை தாம்பரத்திலிருந்தும் 17/05/24 முதல் 30/06/24 வரை திருவனந்தபுரம் கொச்சுவேளியிலிருந்தும் இயக்கப்படும். இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும்.
சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.14 மூன்றடுக்கு ஏசி எகானமி எல் எச் பி பெட்டிகளோடு இவை இயங்கும்.