கஞ்சா வழக்கு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி பதில் தர ஆணை
கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது?. போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்? என்றும் ஐகோர்ட் கிளை கேள்விகளை எழுப்பியுள்ளது