கச்சத்தீவு விவகாரம்-பாஜக வெளியிட்டது போலி ஆவணம்
கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ. மூலம் பெற்றதாக பாஜக வெளியிட்டவை போலி ஆவணங்கள் என்று பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தொடர்பாக வெளியுறவுத்துறை தந்த ஆவணத்தில் அஜய் ஜெயின் என்பவர் கையெழுத்திட்டுள்ளார். ஆவணங்களில் கையெழுத்திட்ட அஜய் ஜெயின் பெயரில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் எந்த அதிகாரியும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜய் ஜெயின் என்ற அதிகாரியே வெளியுறவுத்துறையில் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.