மூத்த குடிமக்களுக்கு ₹4000 பென்சன் வழங்கப்படும்

ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலையில் மூத்த குடிமக்களுக்கு ₹4000 பென்சன் வழங்கப்படும்

ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலையில் மூத்த குடிமக்களுக்கு ₹4000 பென்சன் வழங்கப்படும் என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பேசினார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பண்யம் நகரில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பங்கேற்று பேசியதாவது:
கடந்த தேர்தலில் ராயலசீமாவில் மொத்தமுள்ள 52 இடங்களில் 49 இடங்களில் ஜெகன் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது 52 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவோம். ராயலசீமாவில் மூன்று இடங்களில் மட்டுமே நாம் வெற்றி பெற்றதாக ஜெகன் கேலி செய்தார். இப்போது அவர் போட்டியிடும் புலிவேந்துலாவில் கூட ஜெகனுக்கு எதிர்காற்று வீசி வருவதால் விரக்திக்கு வந்துவிட்டார்.

ஜெகனுக்கு கோபம் வந்தால் டிவியை உடைத்து விடுவார். ஆனால் இப்போது இந்த ஏமாற்றத்தில் எத்தனை பேர் பலியாவார்கள் என்று தெரியவில்லை. ஜெகன் 5 ஆண்டுகளாக அனைத்து திட்டப் பணிகளையும் நிறுத்தினார். ஜெகன் ஒரு சைக்கோ. ஜெகனுக்கு நாசீசிசம் என்ற நோய் உள்ளது. அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், எதிர்த்தால் தாக்கி கொல்லப்படுவார்கள் என்ற கொள்கையைத்தான் ஜெகனும் செயல்படுத்தி வருவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். ஹிட்லர், பின்லேடன், இதே மனநிலையில் இருந்தவர்கள்.

நந்தியாலாவில் இருந்த என்னை வழக்கு எதுவும் இல்லாமல் நள்ளிரவில் வந்து கைது செய்தார்கள். ஏன் என்று கேட்டால் பதில் இல்லை. எனக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலை என்ன? சித்தப்பாவை கோடரியால் கொன்றது, கல் வீச்சு காயம் நாடகம், சேவல் கத்தி தாக்குதல் நாடகம், தந்தை இல்லாத குழந்தை என்று கூறிவிட்டு தந்தையை கொன்றவர்களுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.