முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு; தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னனர் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.