முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா முதலமைச்சருடன் சந்தித்தனர். உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நீட் தேர்வில் சீட் கிடைக்கும் என நம்புகிறேன் என திருநங்கை நிவேதா தெரிவித்துள்ளார். பி.காம் படித்துவிட்டு சி.ஏ. படிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று மாணவர் சின்னதுரை பேட்டி. சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிளஸ்டூ தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.