சோளிங்கர் அரசு மருத்துவமனையில் 1 லிட்டர் பாட்டில் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக் கொண்ட குரங்கு
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ஒரு குரங்கு 1 லிட்டர் பாட்டில் தண்ணீர் குடித்து தனது தாகத்தை தீர்த்து ெகாண்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கடந்த சில தினங்களாக 106 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் காணப்படுகின்றது.