சசிகலா தயக்கம்
தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் சசிகலா தயக்கம்….. அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று தொடர்ந்து கூறிவரும் சசிகலா சமீபத்தில் தொண்டர்களின் நாடித்துடிப்பை பார்க்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தினார் அதிமுக தினகரன் ஓபிஎஸ் அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளவும் தனது ஆதரவாளர்களை தெரிந்து கொள்ளவும் ஒரு விண்ணப்பம் மூலம் தூண்டில் வீசினார்.
அந்தப் படிவத்தில் 15 கேள்விகள் கேட்டிருந்தார் பெயரும் முகவரி கட்சியில் இருக்கும் பதவி 2017இல் வகித்த பதவி உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்று இருந்தன படிவம் வெளிவந்ததும் பரபரப்பு ஏற்பட்டது ஆனால் ..தொண்டர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை.. மௌனமாக இருக்கிறார்கள்… சசிகலா எதிர்பார்த்து அளவு படிவங்களை பூர்த்தி செய்து யாரும் அனுப்பவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தினகரன் ஓபிஎஸ் ஆகிய மூன்று அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுதலுக்கு உற்சாகம் யாரும் காட்டவில்லை இது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் சசிகலா தயங்கி வருகிறார் அடுத்தது என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு தெரிந்ததும் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும் நம்பிக்கையுடன் இருங்கள் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிசசிகலாவின்தவிப்பைஆறுதல்கூறிஅமைதிப்படுத்துகின்றார்களாம்….