கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மகேந்திரா நெல் ரகம் மூட்டை ₹1739க்கு விற்பனை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளையும் நெல் மற்றும் தானியங்களை விற்பனைக்காக கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.அதன்படி, மகேந்திரா நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1739க்கு நேற்று விற்பனையானது.
அதேபோல், விற்பனையான நெல் ரகங்களில் விலை பட்டியல் 75 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை குண்டு 37 – நெல் ரகம் அதிகபட்ச விலை ரூ.1442க்கும், குறைந்தபட்ச விலை ரூ.1379க்கும், மகேந்திரா – நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1739க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1619க்கும், கோ 51- நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1429க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1252க்கும் ஸ்ரீநெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1709க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1696க்கும் விற்பனையானது.
ஆர்என்ஆர் நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1729க்கும் குறைந்த பட்ச விலையாக ரூ.1725க்கும், சிஒ 55 நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1629க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1625க்கும் விற்பனையானது. ரித்திகா நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1696க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1369க்கும், அமோகா நெல் ரகம் அதிகபட்ச விலையாகரூ.1709க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1639க்கும் சிஒ45 நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1406க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1401க்கும், நேற்று விற்பனையானது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மதன் பாண்டியன் தெரிவித்தார்.