பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது அம்மாநில காவல்துறை. தேர்தல் நடத்தை விதியை பாஜக தலைவர்கள் மீறிவிட்டதாக கர்நாடக காங்கிரஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.