பித்தாபுரத்தில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல்
நடிகர் பவன்கல்யாண் போட்டியிடும் பித்தாபுரத்தில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல்
ஆந்திராவில் நடிகர் பவன்கல்யாண் போட்டியிடும் பித்தாபுரத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லப்ரோலு சுங்கச்சாவடியில் சோதனையில் சுமார் ரூ.17 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. கடந்த 13-ம் தேதி வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும் தங்கம் பிடிப்பட்டுள்ளது.