நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை
நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை வழங்கி உள்ளது. மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக்கூடியவையாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது, புக்லெட்டிலேயே எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.