தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து

நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி

அட்சய திரிதியை நெருங்கி வரும் நேரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இப்படியே உயர்ந்து மார்ச் 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.