கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகமாக பாதிக்கும் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழைக் காலத்தில் தமிழகம் வரலாறு காணாத மழை வெள்ளத்தை சந்தித்தது போல் தற்போது வெயில் காலத்திலும் வரலாறு காணாத வெப்ப நிலையை எதிர்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து, தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. குறிப்பாக காலை 8 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது. அதேபோல் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல நகரங்கள் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தினசரியாக பதிவாகிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது அவ்வப்போது வெப்ப அலை பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், அதிக மழை பெய்யும் காலத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் கோடையில் தான் கால்நடைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எனவே அவற்றின் பராமரிப்பில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களைப் போல கால்நடைகளையும் அதிகமாகப் பாதிக்கும். கால்நடைகளுக்கும் வளர்ச்சி மற்றும் உற்பத்தியால் உடலின் வெப்பம் அதிகரிக்கும்.