இளையாங்குடிக்கு விரைந்தது தனிப்படை

ரூ.2 கோடி கொடுக்கல் வாங்கல் தகராறு பர்மா பஜார் கடைகளுக்கு பொருள் வாங்கி தரும் இடைத்தரகர் கடத்தல்: இளையாங்குடிக்கு விரைந்தது தனிப்படை

திருவல்லிக்கேணி அசுதீன் கான் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (35), பர்மா பஜார் கடைகளுக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி கொடுக்கும் இடைத்தரகராக இருந்தார். இந்த நிலையில், குருவியாக செயல்படும் இளையாங்குடி புதூரை சேர்ந்த தமீம் என்பவர் சில வியாபாரிகளிடம் சாகுல் அமீதை அறிமுகம் செய்துள்ளார்.

அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி மதிப்பில் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி தர சாகுல் அமீதிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் பொருட்களை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் பணம் கொடுத்த வியாபாரிகளான இப்ராஹிம், ரிஸ்வான், ரமீஸ், ராஜா, நவாஸ் கான் உள்ளிட்டோர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள சாகுல் அமீது வீட்டிற்கு சென்று, அவரது மனைவியிடம், ரூ.2 கோடி பணத்தை வாங்கி விட்டு உனது கணவர் ஏமாற்றிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.