18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து
தமிழகம்அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ல் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தமிழகம் முழுவதும் 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. முறையான இன சுழற்சி முறையை பின்பற்றி இட ஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனம் என ஐந்து பேர் தொடர்ந்த வழக்கு தொடரப்பட்டது. 4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாற்றி அமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.