வெண்டைக்காய் பருப்பு சாதம்
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – அரை கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் – 3
துவரம் பருப்பு – 100 கிராம்
சாதம் – 4 கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூ ன்
சீரகத்தூள்- அரை ஸ்பூ ன்
பூண்டு- 10 பல்
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
வெண்டைக்காய் பருப்பு சாதம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு அலசி தண்ணீரை வடித்து விட்டு, அதில் தக்காளி, பச்சை மிளகாய், பு ண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.அடுத்து வெண்டைக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சுடானதும், அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும்.வெண்டைக்காயில் உள்ள பசை நீங்கியதும், அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கி, அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும், அதில் சாதத்தை கொட்டி கிளறி இறக்கினால் வெண்டைக்காய் பருப்பு சாதம் ரெடி.