ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை
மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகார்:
ஆளுநர் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து மேற்குவங்கத்தில் உள்ள ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி ஆளுநர் ஆனந்த் போஸ் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் குற்றச்சாட்டியுள்ளார். மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது ஆளுநர் மாளிகையின் ஒப்பந்த பெண் ஊழியர் புகார் அளித்துள்ளனர்.