உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம் வருவதா?:
மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் வீரமுத்துப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி பெற்றுத் தரக்கோரி மக்கள் பிரதிநிதிகளிடம் ஏன் முறையிடவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.