அக்னி நட்சத்திரம் துவங்க
அக்னி நட்சத்திரம் துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
அக்னி நட்சத்திரம் துவங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 17 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கரூரில் அதிகபட்சமாக 112 டிகிரியும், ஈரோட்டில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் பதிவானது. இந்நிலையில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது, வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.