முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின்போது, வாட்ஸ் அப் குழு மூலம் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 கிராம் மெத்தப்பிட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.