பெங்களூருவில் மழையே இல்லாத மாதமாகப் பதிவாகியிருக்கிறது.
பெங்களூருவில் கடந்த 40 ஆண்டுகளில் காணாத அளவுக்கு இந்த ஏப்ரல் மாதம் மழையே இல்லாத மாதமாகப் பதிவாகியிருக்கிறது.
பெங்களூருவின் சில பகுதிகளில் கடந்து சென்று ஏப்ரல் மாதத்தில் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஆங்காங்கே சில சொட்டு மழை நீர் விழுந்த போதும், அதுமழையாகப் பதிவாகவில்லையாம்.
அதாவது, ஒரு துளி மழையும் பெய்யாமல் காய்ந்து போன ஏப்ரல் மாதம் என்பது பெங்களூருவில் கடந்த 1983ஆம் ஆண்டுதான் இருந்துள்ளது. அதுபோல கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஏப்ரல் மாதம் வந்துள்ளது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூருவில் ஒரு நாள் கூட மழை பெய்யாமல் ஏப்ரல் மாதம் கடந்து சென்றுள்ளது. எல் நினோ காரணமாக, இதுபோன்ற அசாதாரண வெப்பம் நிலவுகிறது. இது விரைடிவல் டா நினா ஆக மாறும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மாறினால் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இதுதான், கடந்த 50 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவில் இரண்டாவதாக உள்ளது. இதற்கு முன்பு இங்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது குறிப்பிடதத்க்கது.
அதேவேளையில், மே மாதம் முதல் வாரத்தில் அல்லது 5ஆம் தேதிக்குப் பிறகு பெங்களூருவின் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.