நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

 இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் மே 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் பதிவிறக்க இயலாவிடில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஹால் டிக்கெட் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

* exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ நீட் இணையதளத்தைப் பார்வையிடவும்

* முகப்புப் பக்கத்தில் “NEET அட்மிட் கார்டு 2024” பதிவிறக்க அறிவிப்பைக் கண்டறியவும்.

* இணைப்பைக் கிளிக் செய்யவும், நீங்கள் உள்நுழைவு பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

* உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.

* “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.

* அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும் (அது PDF வடிவத்தில் இருக்கும்) மற்றும் எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

நீட் தேர்வு முறை

நீட் தேர்வு 180 பல தேர்வு கேள்விகளை கொண்டுள்ளது. இந்தத் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களைக் கொண்டது. விண்ணப்பதாரர்கள் தேர்வை முடிக்க 3 மணி நேரம் 20 நிமிடங்கள் உள்ளன. சரியான விடைகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (எதிர்மறை மதிப்பெண்) கழிக்கப்படும். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published.