சவுமியா சாமிநாதன் கவலை.
ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு: சவுமியா சாமிநாதன் கவலை.
வெப்ப அலையால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உ.பி, மேற்குவங்கம், தமிழகம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொளுத்தும் வெயிலால் வெப்ப அலை வீசி வருகிறது.
சாலைகளில் வெயில் அனலாக தகித்ததால், எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் நகரின் பல்வேறு முக்கிய ரோடுகளில் கூட மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக காணப்பட்டு வருகிறது.
கடுமையாக பாதிப்பு
வெப்ப அலை தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:
ஒட்டுமொத்த ஆசிய மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.