10 வனக்குழுவினர் தீவிரம்

ஓவேலி வனச்சரக பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு:

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூறுத்தி தேசிய பூங்கா சார்பில் நேற்று தொடங்கி 3 நாட்கள் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக பிளாக் எண் 2 ஓவேலி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனப்பணியாளர்கள், நீலகிரி வரையாடு திட்ட மூத்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பக புலிகள் வன சிறப்பு இலக்கு படை பணியாளர்கள் உள்ளடக்கிய குழு.

தவளை மலை மற்றும் எல்லமலை பகுதிகளில் உள்ள வரையாடு வாழ்விடங்களான மலை முகடுகள், புல்வெளி மலைகள் மற்றும் நீர் நிலைகளில் வரையாடு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து பிளாக்குகளில் 10 குழுவினர், தீவிர கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.