திருடி மோசடி செய்யும் கும்பல் கைது
பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது
பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களை குறிவைத்து ஆன்லைன் நுழைவுத் தேர்வு மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், ஆன்லைன் நுழைவுத் தேர்வு மோசடியின் மூளையாக செயல்பட்ட உத்தராகண்ட்டைச் சேர்ந்த 2 பேரை உத்தரபிரதேச போலீஸ் கைது செய்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த ராகுல்குமார், ஜித்தேஷ் குமார் டேராடூனில் கல்வி ஆலோசனை மையம் நடத்தி மோசடிகளை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆன்லைன் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி உறுதி செய்யப்படும் என விளம்பரம் கொடுத்து இருவரும் மோசடியை அரங்கேற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் சேர விரும்பிய மாணவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடிக்கு உதவியது அம்பலமாகியது. அரியானாவைச் சேர்ந்த குல்வீர்குமார், கவுரவ் ஆகியோர் நுழைவுத் தேர்வு மோசடிக்காக ஆய்வகம் ஒன்றை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.