கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பள்ளி,கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிரேட் ரிப்ட் வேலி என்ற இடத்தில் உள்ள கிஜாபே அணையில் நேற்று உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இதில், பலர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் 45 பேர் இறந்துள்ளனர். சாலையை வெள்ளம் அரித்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கென்யா மட்டுமில்லாமல் அருகில் உள்ள டான்சானியா,புருண்டி ஆகிய நாடுகளிலும் மழைக்கு 155 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.