கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு

கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம் என இந்த ஊசியை தயாரித்த நிறுவனம் லண்டன் கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளது.

கோவிஷீல்டு காரணமாக பலர் உடல்நலம் பாதிக்கப்படுவதாக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் விசாரணையில் , கோவிஷீல்டு தயாரித்த ஆக்ஸ்போர்டு பல்கலை.,யுடன் இணைந்து அஷ்ட்ராஜெனேகா நிறுவனம் கோர்ட்டில் பாதிப்பு குறித்து ஒப்புக்கொண்டுள்ளது.

‘ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விஷயம் தான். ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome )பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.