அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை
திருச்சியில் இன்று பட்டப்பகலில் அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இவர்கள் இருவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது. பின்னர் இது முன்விரோதமாக மாறியது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் சேகர் கொலை செய்யப்பட்டார். இதேபோல் 2021ம் ஆண்டு பெரியசாமியின் மகன் சிலம்பு (எ) சிலம்பரசன் கொலை செய்யப்பட்டார். இதனால் இருகுடும்பத்தினருக்கும் முன்விரோத பகை இருந்து வருகிறது.
கேபிள் சேகரின் மனைவி கயல்விழி. அதிமுக மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவரது மூத்த மகன் முத்துக்குமார்(28). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி அருகே இன்று காலை 11 மணியளவில் முத்துக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த நபர்கள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து முத்துக்குமாரை சரமாரியாக வெட்டினர்.