தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி
இரயில்வே அறிவிப்பு
பெங்களூர் – கவுகாத்தி இடையே ஜோலார்பேட்டை,காட்பாடி(வேலூர்), விஜயவாடா, புவனேஸ்வர், கரக்பூர் வழியாக வாராந்திர குளிர்சாதன ரயில்
தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ;
பெங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 00.30 மணிக்கு புறப்படும் 06569 கவுகாத்தி சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை 5.30க்கு கவுகாத்தி சென்றடையும்.
இந்த ரயிலின் கடைசி சேவை மே 19ம் தேதி ஆகும்.
மறு மார்க்கத்தில் புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்படும் 06570 பெங்களூர் சிறப்பு ரயில், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு பெங்களூர் வந்து சேரும். இந்த ரயிலின் கடைசி சேவை மே 22ம் தேதி ஆகும்.
இந்த ரயிலில் 4 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், 14 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், 2 சரக்கு மற்றும் ஜெனெரேட்டர் ஒருங்கிணைந்த பெட்டியும் இணைக்கப்பெற்றிருக்கும்.