திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் ஒரு ஆண் சடலம் கிடந்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் இன்று அதிகாலையில் பச்சை துணியால் இறுக்கமாக கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. அதன் அருகில் துண்டிக்கப்பட்ட கையும் கிடந்தது. உடல் மற்றும் கையை பார்த்ததும் அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். சடலமாக கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். இரு கைகளும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஒரு கை, தனியாக கிடந்தது. மற்றொரு கை, போர்வையால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த உடலின் அருகிலும் கிடந்தது. முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது.