அதிமுக ஆதரவு அளிக்கும் என கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் நல்ல மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்து இருப்பார்கள் என நம்புகிறோம். தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றுவோம் என சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காகவே.அவர் விடும் அறிக்கைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை வெற்றிபெற்று யார் பிரதமராக வந்தாலும் அதிமுக ஆதரவு அளிக்கும். மத்தியில் தமிழர் நலன் காக்கும் அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார்.