நைனிடாலில் காட்டுத் தீ… ராணுவ உதவியுடன் தீயணைப்பு பணிகள் தீவிரம்!
உத்தராகண்ட் மாநிலம், நைனிடால் மலைப் பகுதியில் வெப்பத்தின் காரணமாக காட்டூத்தீ ஏற்பட்டுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக பரவி நைனிடால் நகரை அடைந்துள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அவசர நடவடிக்கையாக உத்தராகண்ட் அரசு, இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. அதன்பேரில் ஹெலிகாப்டர் மூலம், ஏரியிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்பட்டு, காட்டுத் தீ எரிந்து வரும் பகுதியில் ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.