திமுக ஆட்சியில் அனைத்திலும் குறைபாடு உள்ளது: பட்டியலிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவுக்கு பொருத்தவரை அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் இயல்பாக வாக்களிக்க முடியாத சூழல் இருந்தது
“தமிழகம் முழுவதும் வெப்பசலனம் அதிகரித்த காரணத்தால் மக்கள் குடிநீர் வழங்குவதற்காக அதிமுக சார்பாக மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளை தேர்ந்தெடுத்து தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், குடிநீர் வழங்கி தாகத்தை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கி வருகின்றனர்