20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் – சுப்மன் கில்
ஐ.பி.எல் டி20 சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது
இந்த தொடர் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி தங்களது முதல் போட்டியினை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதேநேரம், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நிலவிவருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.