திருப்பூர் பட்டியலின மாணவி தலைமை ஆசிரியர்!

திருப்பூர் பட்டியலின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பட்டியலினத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளை, தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி என்பவர் கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு அறிவியல் ஆசிரியர் சித்ராவும் உடந்தையாக இருப்பதாக மாணவிகள் பேசும் வீடியோ வெளியாகியிருந்தது.

இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.