தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்துத் துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.