டெல்லியில் ஸ்பைடர்மேன்

டெல்லியில் ஸ்பைடர்மேன் உடையணிந்து, இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் ஒரு ஜோடி சூப்பர் ஹீரோக்கள் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் போல உடையணிந்து இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அவர்கள் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம், பக்கவாட்டு கண்ணாடிகள், நம்பர் பிளேட் என எதுவும் இல்லாமல் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒரு பெண் உட்பட இருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

“Spiderman in Najafgarh” என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் 9.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 77,000 க்கும் மேற்பட்ட ‘லைக்குகளையும்’ பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.