மக்களவை தேர்தலில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என பா.ஜ.க.வினர் குற்றச்சாட்டு..!!
மக்களவை தேர்தலில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியது.
பூத் ஏஜெண்டாக பணியாற்றிதற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்துமாணிக்கத்துடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம் செய்தனர். முத்துமாணிக்கத்துடன் கட்சியினர் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. முத்துமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க.வினர் 8 பேர் மீது துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.