மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது. நடைமுறைகள், தொழில்நுட்பம் அடிப்படையில் விரிவாக விவாதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.