பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
பிரதமர் நரேந்திர மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு இன்று விசாரணை வர உள்ளது. பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கறிஞர் ஆனந்த் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். உ.பி.யின் பிலிபித் பகுதியில் ஏப்ரல்.9-ல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.