கல்லூரி மாணவிகள் சந்திப்பு
திருச்சி இனாம்புளலியூரை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி காளிதாஸ் வேளாண் கல்லூரி மாணவிகள் சந்திப்பு
திருச்சி அடுத்த இனாம்புளலியூரை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி காளிதாஸ். இவரை தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகளான (ரஞ்சிதா, ரோஷினி, சாய் லக்ஷ்மி, ஷாலினி, சிந்து, சுஜிதா ஸ்ரீ, சன்மதி, சுமிப்ரீதி, சுவேதா, தாமரை, த்ரிஷா, வைத்தீஸ்வரி ஆகியோர் சந்தித்து இயற்கை வேளாண்மை பற்றி கேட்டறிந்தனர்.
அவரின் வயலில் நெல், மல்லிகை, சாமந்தி, முல்லை மற்றும் அவரை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். நுண்ணுயிர் உரங்களான சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், பிவேரியா பேசியானா,பச்சை மஸ்கார்டின் பூஞ்சை, வெர்டீசிலியம் லெக்கானி, பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ், சயனோபாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் மேற்கொள்கிறார்.