சீன மொழிக்கு மாறிய தமிழக அரசு பஸ்.
திண்டுக்கல்லில் அரசு பஸ் ஒன்றின் பெயர் பலகை சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் திக்குமுக்காடினர்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ் தயாராக இருந்தது.
பஸ்சின் பின் பகுதியில் உள்ள டிஜிட்டல் பெயர்பலகைகளில் வழக்கத்திற்கு மாறாக தமிழும் இல்லாமல், ஆங்கிலமும் இல்லாமல் வித்தியாசமான மொழியிலிருப்பது போன்று ஊர் பெயர்கள் பதிவாகியிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் திக்குமுக்காடினர்.
சிலர் கண்டக்டர், டிரைவரிடம் கேட்டு பஸ்சில் ஏறி பயணித்தனர்.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டதாகவும், டிஜிட்டல் புரோகிராமை மாற்றியதும் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்